உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா
பள்ளி கல்வித் துறை சாா்பில் செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 1.40 கோடியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் தலைமையேற்று அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் அமுதா, செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சி தலைவா் தமிழரசி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், பம்மதுகுளம் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.