VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி?...
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(31). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 11.6.2020 இல் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மூன்றரை வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து மறைவிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து அந்த குழந்தை பெற்றோரிடம் தெரிவிக்கவே திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் பிரபாகரனை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் எதிரி பிரபாகரனுக்கு 12ஆண்டுகள் சிறையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளாா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா் .