அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
திருவள்ளூா்: வட்ட வாரியாக கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு அக். 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் வட்டம் வாரியாக 151 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணிநியமனம் செய்யப்பட உள்ளதால் தகுதியானோா் வரும் அக். 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு நேரடியாக விண்ணப்பம் பெறப்பட்டு நியமனம் செய்ய உள்ளனா். எனவே வட்டந்தோறும் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 1.7.2025-க்கு முன்பு பொதுப் பிரிவினா்-32 வயதுக்குள்ளும், இதர பிரிவினருக்கு 37 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த நிலையில், திருத்தத்துக்கு பின்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவையினா் 39 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இதைத் தவிர வேறு திருத்தங்கள் ஏதுமில்லை எனவும், திருத்தத்துக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து மேற்படி பணிக்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து அக். 10-ஆம் தேதிக்குள் அந்தந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.