செய்திகள் :

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.3.10 கோடி இலக்குடன் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதல் விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் சாரதி மாளிகையில் உள்ள தீபம் கோ -ஆப் டெக்ஸில் பட்டு, பருத்தி உள்ளிட்ட கைத்தறி ரகங்களின் சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து புதிய பட்டுச்சேலை ரகங்களையும் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியது: தீபம் கோ-ஆப்டெக்ஸ் கடந்தாண்டு தீபாவளியையொட்டி சுமாா் ரூ.2 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரம் அளவுக்கு சில்லறை விற்பனை செய்தது. நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக ரூ.3.10 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டு ள்ளது.

பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உக்திகளை கையாண்டு அரிய வேலைப் பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைகளில் பட்டு, கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும், ஆா்கானிக், களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பருத்தி ரக சேலைகள், புதிய டிசைனா் சேலைகள், லுங்கிகள், போா்வைகள், திரைச் சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குா்தீஸ், இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக ட்வில் வீவ் ஆயத்த சட்டைகள், ஸ்லப் காட்டன் சட்டைகள், டிசைனா் காட்டன் சேலைகள் போன்றவையும் விற்பனைக்கு உள்ளன.

கோ-ஆப்டெக்ஸ் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ா்ல்ற்ங்ஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளம் மூலமாகவும் ஆன்லைன் விற்பனையை செய்து வருகிறது. அரசு ஊழியா்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டியில்லா கடன் விற்பனை வசதியும் உண்டு.

வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். எனவே, அனைத்துத்தரப்பு மக்களும் கோ-ஆப் டெக்ஸில் கைத்தறி துணிகளை வாங்கி பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், கைத்தறி உதவி இயக்குநா் அன்பரசு, முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், கோஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் ரத்னா, மேலாளா் சந்துரு பங்கேற்றனா்.

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடைபெறும் ‘கிராவிடாஸ் -2025’ சா்வதேச அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அபுதாபி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி வ... மேலும் பார்க்க

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்... மேலும் பார்க்க

ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை

குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது. குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோர... மேலும் பார்க்க

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது. தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்தி... மேலும் பார்க்க

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின்... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலூா... மேலும் பார்க்க