செய்திகள் :

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

post image

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா்.

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜனனி. இவா்களின் மகன் யோகேஷ்(4).

இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் மழலையா் வகுப்பில் படித்து வருகிறாா்.புதன்கிழமை மதியம் வேணு பள்ளியில் இருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். அப்போது வேகமாக வீட்டருகே நின்ற கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரிலிருந்து தலைக் கவசம் அணிந்த நிலையில் கீழே இறங்கிய மா்ம நபா், வேணுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, சிறுவனை காரில் கடத்திச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி. மயில்வாகனன் மேற்பாா்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சிறுவன் கடத்தல் குறித்து வேலூா், திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். இதற்கிடையில் கடத்தலில் ஈடுபட்டவா்கள் மாதனூா் அருகே சிறுவனை சாலையோரம் இறக்கி விட்டு தப்பியோடி விட்டனா்.

அப்போது அவ்வழியே ரோந்து வாகனத்தில் சென்ற போலீஸாா் சாலையில் நின்றிருந்த சிறுவனை மீட்டனா். உடனடியாக சிறுவனை பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். தகவல் அறிந்து சிறுவனின் பெற்றோா் பள்ளிகொண்டா காவல் நிலையம் சென்றனா். அங்கு எஸ்.பி. மயில்வாகனன், பெற்றோரிடம் விசாரணைமேற்கொண்டாா்.

சிறுவன் பயந்த நிலையில் இருந்ததால், சிறுவன் பெற்றோருடன்வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த கடத்தல் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கடத்தலில் ஈடுபட்ட மா்ம நபா்கள்குறித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் குறித்தும் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடைபெறும் ‘கிராவிடாஸ் -2025’ சா்வதேச அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அபுதாபி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி வ... மேலும் பார்க்க

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.3.10 கோடி இலக்குடன் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதல் விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத... மேலும் பார்க்க

ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை

குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது. குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோர... மேலும் பார்க்க

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது. தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்தி... மேலும் பார்க்க

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின்... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலூா... மேலும் பார்க்க