தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து
செப்.25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
இதுபற்றிய விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 15931/2025, தேதி: 25.8.2025
பணி: Specialist
i. Communication, Public Awareness and Capacity Building
தகுதி: Communication, Journalism பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ⅱ. Data Monitoring & Documentation
தகுதி: Computer Science, Statistics, Data Science, Mathematics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii. Road Safety Aspects
தகுதி: Civil Engineering பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,50,000
பணி: Assistant
சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Computer Applications, Information Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in/jobopportunity என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் பயோ டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகலையும் சுய சான்றொப்பம் செய்து tnrsmu2025@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.