செய்திகள் :

ஆத்திரமூட்டும் செயல்கள்... பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

post image

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் தொடங்கியது எப்போது?

ஆசிய கோப்பையில் லீக் போட்டியில் இந்திய கேப்டன் பாகிஸ்தான் கேப்டனும் கைக் குலுக்க மறுத்துவிட்டதால், அப்போதிருந்தே இரு அணிகளுக்கும் பிரச்னை தொடங்கியது.

பஹல்காம் தாக்குதலுக்காக இப்படி செய்தேன் என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் வீரர்கள் செய்தது என்ன?

இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது இந்திய ரசிகர்கள் ஹாரிஸ் ராஃபிடம் ”கோலி, கோலி” எனக் கத்தினார்கள். இதற்குப் பதிலாக விமானங்கள் பறந்து கீழே விழுவது போல சைகை காண்பிப்பார்.

மேலும் 6-0 எனவும் காண்பிப்பார். அது ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை நினைவுப் படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்தபோது துப்பாக்கிச் சூடு செய்வதைப் போல கொண்டாடினார். இதுவும் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.

இந்நிலையில், இந்தச் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக இருப்பதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.

அடுத்து என்னவாகும்?

இரு பாகிஸ்தானியர்களும் சரியாக பதிலளிக்காவிட்டால் தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதற்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் மீது பாகிஸ்தான் அணி அளித்த புகாருக்கு ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் கூறியது

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்றால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

India has filed an official complaint with the ICC against Pakistan cricketers Haris Rauf and Sahibzada Farhan for their provocative gestures during the two sides' Asia Cup Super 4 game here last Sunday.

ஆஸி. ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ஏ!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ மற்றும் ஆஸி. ஏ அணிகள் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

சூப்பா் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பா் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி வெற்றது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான சூப்பா் 4 சுற்றில் இந்தியா - வங்கதேச அணிகள் ஐக்க... மேலும் பார்க்க

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

சூப்பர் 4 சுற்றில் அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 4 அணிகள் மோதும் ஆசியக... மேலும் பார்க்க

இறுதிக்குச் செல்லுமா இந்திய அணி! வங்கதேசம் பந்துவீச்சு!

ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.Will the Indian team make it to the final? Bangladesh bowling! மேலும் பார்க்க

இந்தியாவுடன் தோற்றதால்... மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!

இலங்கை அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்ற பாகிஸ்தான் வீரர் ஹுசைன் தலத் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதினால் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார். முத... மேலும் பார்க்க

சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!

இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் 19 வயதுக்... மேலும் பார்க்க