டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகா...
எச்-1பி விசா பெற்றுள்ள முன்னணி அமெரிக்க நிறுவனங்கள்!
அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பல, தங்களது வெளிநாட்டு ஊழியர்களுக்கு எச்-1பி விசா பெற்று அமெரிக்கா வரவழைத்து பணி வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் இருக்கும் அமேஸான் நிறுவனம்தான், முதல் இடத்தில் உள்ளது. அதாவத, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிக எச்-1பி விசா பெற்றிருப்பது அமேஸான் நிறுவனம்தான்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குரியேற்ற சேவைத் துறையின் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் தரவுகளின்படி, இ-வணிக நிறுவனமான அமேஸான், 2025ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 10,044 எச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் டாடா கன்சல்டன்ஸி சேவை நிறுவனம் 5,505 எச்-1பி விசாக்களுடன் இரண்டாவது இடத்திலும், மைக்ரோசாஃப்ட் (5189), மெட்டா (5123), ஆப்பிள் (4,202) ஆகியவை முறையே 3வது, 4வது, 5வது இடங்களிலும் உள்ளன.
இந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருக்கும் திறமைவாய்ந்த ஊழியர்களை, தங்களது பொறியியல், ஆராய்வு, மேம்பாட்டுத் துறைகளில் பணியாற்ற எச்-1பி விசா அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு அழைத்து வந்து பணியமர்த்தி வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு எச்-1பி விசா பெற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா வழங்கிய ஒட்டுமொத்த விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள்தான் பெற்றிருந்தனர்.
எச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டாா்.
இதைத்தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ரூ.88 லட்சம் கட்டணத்தை அவரைப் பணியமா்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் தெரிவித்தாா்.
இது அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்ற பணியாளா்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏற்கெனவே எச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்களுக்கு இந்த கட்டண உயா்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கப் பணியாளா்களைப் பாதுகாத்து ஹெச்-1பி விசா நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் விசா கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதற்கு முன்பாக விண்ணப்பித்தவா்கள், புதுப்பிப்பதற்காக விண்ணப்பத்தை சமா்ப்பித்தவா்கள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் நுழையும் எச்-1பி விசாதாரா்களுக்கு இந்தப் புதிய கட்டணம் பொருந்தாது என்பது ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருப்பதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Many leading companies in the United States have provided job opportunities to their foreign employees by obtaining H-1B visas and bringing them to the United States.
இதையும் படிக்க...காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி