செய்திகள் :

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவதா" - செல்வப்பெருந்தகை

post image

எடப்பாடி பழனிசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் விசுவாசமாக உள்ளாரா? அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சித்த பாஜகவுடன் அவர் கூட்டணி வைக்கலாமா? என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி, "செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார். தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை."என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் தற்போது செல்வப் பெருந்தகை, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள். டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்? என்னை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள்.

நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன. விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?."என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பீலா வெங்கடேசன் மறைவு: ``பெருந்தொற்றுக் காலத்தில்'' -முதல்வர் ஸ்டலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி பீலா வெங்கடேசன் (56), நீண்ட காலமாக மூளைக் கட்டியுடன் போராடி வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 24 புதன்கிழமை) காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும் எதிர்க... மேலும் பார்க்க

Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!

அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். இவருக்கு வயது 56. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எல். வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை விதிகள் தளர்வு: "விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும்" - உதயநிதி

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 5 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்து 543 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா 400 பேருக்கும், 1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 80 ரூபாய் மதிப்... மேலும் பார்க்க

GST 2.0: பால் முதல் கார் வரை - பொருட்களின் விலை குறைந்துள்ளனவா? நீங்களே களநிலவரத்தைச் சொல்லுங்கள்!

இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசி... மேலும் பார்க்க

``UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை

2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை (CAG) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இதில், அதிக வருவாய் உபரி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரத... மேலும் பார்க்க

Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி

மோடியும், அமித் ஷாவும் பாஜகவின் இரட்டைப் பெரும் தூண்கள். பிரதமராக மோடி வலம் வர, கட்சியின் தேசியப் பிரச்னையிலிருந்து, உள்ளூர் உட்கட்சிப் பிரச்சனை வரை பஞ்சாயத்து பண்ணி அடுத்தடுத்த வெற்றிக்காக கூட்டணியைக... மேலும் பார்க்க