செய்திகள் :

சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

post image

பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக உள்ள ஜி.கே. மணியை மாற்ற வேண்டும் எனக் கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து இன்று(வியாழக்கிழமை) மனு அளித்துள்ளனர்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதன்படி பாமக கொறடாவாக மயிலம் சிவக்குமார், பேரவைக் குழுத் தலைவராக வெங்கடேஸ்வரன், பேரவை துணைக் குழுத் தலைவராக சதாசிவம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறுகையில், "நாங்கள் அளித்த 2 கடிதங்களை முறையாக பரிசீலனை செய்து வரும் கூட்டத்தொடரிலேயே நடவடிக்கை மேற்கொள்வோம் என்ற வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். பாமக எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது

பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை விடுவித்துள்ளோம். சின்னம், வேட்பாளர் படிவம் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணிக்கே உண்டு" என்று கூறியுள்ளார்.

இதனிடையே ராமதாஸ் தரப்பு, சென்னையில் தலைமைச் செயலரை சந்தித்து மனு அளித்துள்ளது.

அன்புமணி தரப்பினரால் ராமதாஸுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி ஜி.கே. மணி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

Anbumani-supporting MLAs meet TN Assembly Secretary

தமிழக பேரவைத் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்த பாஜக!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம், கூட்டணி விவ... மேலும் பார்க்க

மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தல்: பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவள... மேலும் பார்க்க

கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (25-09-2025) காலை மத்திய கிழ... மேலும் பார்க்க

மருத்துவர், ஐஏஎஸ், பேரிடர் கால நிர்வாகி பீலா வெங்கடேசன்!

எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அரசின் பல பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி, பேரிடர் கால நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட பீலா வெங்கடேசன், தன்னுடைய 56வது வயதில் காலமானார்.தமிழக அரசின் முதன்மைச் செயலராக இர... மேலும் பார்க்க

தமிழக கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! - முதல்வர் பெருமிதம்

தமிழக அரசு அறிவித்த தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் உள்ள முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ப... மேலும் பார்க்க

தடுப்பூசி போட்ட 2 வயதுக் குழந்தை பலி: உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூரில் தடுப்பூசி போட்டதால் 2 வயதுக் குழந்தை உயிரிழந்ததாகவும், நீதி கேட்டு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு ப... மேலும் பார்க்க