செய்திகள் :

`வாழையாடி கிராமம் முதல் முதல்வர் மெச்சும் செயலாளர் வரை' - பீலா வெங்கடேசன் பயணம்

post image

பீலா வெங்கடேசன்

தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் நேற்று 56-வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கொரோனா காலத்தில் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த பீலா வெங்கடேசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினின் இரங்கலில் கூட `கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றியவர்' என அவரின் பணியை மெச்சியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இவர் குறித்த தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன.

பீலா வெங்கடேசன்
பீலா வெங்கடேசன்

தூத்துக்குடி மாவட்டம் வாழையாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன்.

2006-ம் ஆண்டு சாத்தான்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் வேட்பாளர் ராணி வெங்கடேசனுக்கும் - காவல்துறை டிஐஜியாக ஓய்வுபெற்ற எஸ்.என் வெங்கடேசனுக்கும் மகளாகப் பிறந்தார்.

தூத்துக்குடி பூர்வீகம் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பீலா வெங்கடேசன், 1992-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாரான பீலா வெங்கடேசன், 1997-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பொறுப்பு வழங்கப்பட்டு குடிமைப் பணிகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறை போன்ற துறைகளிலும் பணியாற்றினார்.

இதற்கிடையில், கணவர் ராஜேஸ் தாஸுக்கு தமிழ்நாட்டுக்கு பணி மாறுதல் கிடைத்தது. அதனால் தமிழக அரசு நிர்வாகத்தில் பொறுப்பு கோரினார்.

அதன் அடிப்படையில், செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத் துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார் பீலா வெங்கடேசன்.

பீலா வெங்கடேசன்
பீலா வெங்கடேசன்

இந்த நிலையில்தான் 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சுகாதாரத்துறையில் இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டார்.

அந்தச் சூழலில், பீலா வெங்கடேசனுக்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. அது கொரோனா காலம் என்பதால், பம்பரமாகச் சுற்றிச் சுழன்று பணியாற்றினார்.

அடிக்கடி தொலைக்காட்சிகளில் பேட்டி, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தகவல் தெரிவிப்பது என அவரின் தீவிர உழைப்பால் தமிழ்நாட்டு மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு எரிசக்தித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீலா தன் கணவர் ராஜேஷை விவாகரத்து செய்து, பீலா ராஜேஷ் என்பதை பீலா வெங்கடேசன் எனத் தன் தந்தையின் பெயரை இணைத்து மாற்றிக்கொண்டார்.

இச்சூழலில் தான் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவதா" - செல்வப்பெருந்தகை

எடப்பாடி பழனிசாமியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் விசுவாசமாக உள்ளாரா? அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் ம... மேலும் பார்க்க

பீலா வெங்கடேசன் மறைவு: ``பெருந்தொற்றுக் காலத்தில்'' -முதல்வர் ஸ்டலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி பீலா வெங்கடேசன் (56), நீண்ட காலமாக மூளைக் கட்டியுடன் போராடி வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 24 புதன்கிழமை) காலமானார். இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலினும் எதிர்க... மேலும் பார்க்க

Beela Venkatesan: அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்!

அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். இவருக்கு வயது 56. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எல். வெங்கடேசனுக்கும், சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை விதிகள் தளர்வு: "விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும்" - உதயநிதி

விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் 5 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரத்து 543 ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா 400 பேருக்கும், 1 கோடியே 4 லட்சத்து 32 ஆயிரத்து 80 ரூபாய் மதிப்... மேலும் பார்க்க

GST 2.0: பால் முதல் கார் வரை - பொருட்களின் விலை குறைந்துள்ளனவா? நீங்களே களநிலவரத்தைச் சொல்லுங்கள்!

இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசி... மேலும் பார்க்க

``UP-க்கு ரூ.37,000 கோடி வருவாய் உபரி; TN-க்கு ரூ.36,000 கோடி வருவாய் பற்றாக்குறை'' - CAG அறிக்கை

2022-23 நிதியாண்டுக்கான மாநிலங்களின் பொருளாதாரச் செயல்திறன் குறித்து இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை (CAG) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இதில், அதிக வருவாய் உபரி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரத... மேலும் பார்க்க