லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!
நிலவுரிமையைப் பேசினாலும் காந்தாரா ஒரு வியாபாரம்தான்: அதியன் ஆதிரை
தண்டகாரண்யம் படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை காந்தாரா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அதியன் ஆதிரை தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
செப். 19 வெளியீடாகத் திரைக்கு வந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தினமணி யூடுயூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த இயக்குநர் அதியன் ஆதிரையிடம், ‘காந்தாரா போன்ற மத நம்பிக்கைகளை முன்வைத்து நிலவுரிமையைப் பேசும் படங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அதியன், ”அறிவியல் கடவுள் இல்லை என்பதைத்தான் சொல்கிறது. காந்தாரா திரைப்படம் நில உரிமையைப் பதிவு செய்தாலும் மாயையும் வைத்திருக்கிறது. அது முழுக்க முழுக்க வியாபாரம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?