செய்திகள் :

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

post image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்று (செப்டம்பர் 25) அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டபோது, மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும், இந்தியா ஏ அணியை சிறப்பாக வழிநடத்தியதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் அணியை கேப்டனாக வழிநடத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷ்ரேயாஸ் ஐருக்கு பிரிட்டனில் முதுகுப் பதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய நேரம் தேவைப்படுகிறது. ஓய்வு வேண்டுமென அவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அவர் இரானி கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indian team's Shreyas Iyer has requested the BCCI to grant him a 6-month break from Test cricket.

இதையும் படிக்க: மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள்!

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் 3 தமிழர்கள் சேர்ப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஷுப்மன் கில் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் அக்.2 முதல் அக்.14ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவுக... மேலும் பார்க்க

இரானி கோப்பை: ரஜத் படிதார் தலைமையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி!

இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சீசனில் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 27 ஆண்... மேலும் பார்க்க

ஆஸி. ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ஏ!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ மற்றும் ஆஸி. ஏ அணிகள் நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆத்திரமூட்டும் செயல்கள்... பாகிஸ்தான் வீரர்கள் மீது பிசிசிஐ புகார்!

பாகிஸ்தான் வீரர்களின் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக ஐசிசியிடம் பிசிசிஐ தனது புகாரைத் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க