செய்திகள் :

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

post image

தமிழக அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பீலா வெங்கடேசன், புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 56.

சென்னை கொட்டிவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பீலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பீலா வெங்கடேசன் பின்னணி

1997-ஆம் ஆண்டு பிகாா் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா, தோ்ச்சி பெற்றாா். போஜ்பூா் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவா், மண வாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறினாா்.

இதன்பிறகு, செங்கல்பட்டு சாா் ஆட்சியராக தமிழ்நாட்டில் பணியைத் தொடங்கினாா். சுகாதாரம், வணிகவரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைகளின் செயலராக பொறுப்பு வகித்தாா். கரோனா காலத்தில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினாா்.

தற்போது எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக பணியாற்றி வந்த சூழலில், திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா். கடந்த சில மாதங்களாக மருத்துவமனையிலும், இல்லத்தில் இருந்தபடியும் அவர் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Chief Minister MK Stalin pays tribute to Beela Venkatesan

இதையும் படிக்க : டிடிவி தினகரனுடன் சந்திப்பா? செங்கோட்டையன் விளக்கம்

மருத்துவர், ஐஏஎஸ், பேரிடர் கால நிர்வாகி பீலா வெங்கடேசன்!

எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அரசின் பல பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி, பேரிடர் கால நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட பீலா வெங்கடேசன், தன்னுடைய 56வது வயதில் காலமானார்.தமிழக அரசின் முதன்மைச் செயலராக இர... மேலும் பார்க்க

தமிழக கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! - முதல்வர் பெருமிதம்

தமிழக அரசு அறிவித்த தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் உள்ள முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ப... மேலும் பார்க்க

தடுப்பூசி போட்ட 2 வயதுக் குழந்தை பலி: உறவினர்கள் போராட்டம்!

திருப்பத்தூரில் தடுப்பூசி போட்டதால் 2 வயதுக் குழந்தை உயிரிழந்ததாகவும், நீதி கேட்டு உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு ப... மேலும் பார்க்க

ரணகளம்... முதல்வரின் ஏஐ விடியோவை பகிர்ந்த உதயநிதி!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செய்யறிவு(ஏஐ) காணொலியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்... மேலும் பார்க்க

டிடிவி தினகரனுடன் சந்திப்பா? செங்கோட்டையன் விளக்கம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செ... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வட்டமடித்த பின்னர், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.இந்த விமானம் சென்னையில் தரையிறங்காமல் வட்டமடித்த... மேலும் பார்க்க