செய்திகள் :

டிடிவி தினகரனுடன் சந்திப்பா? செங்கோட்டையன் விளக்கம்

post image

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

இதனிடையே, தில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் செங்கோட்டையன் சந்தித்தார்.

இந்த நிலையில், திடீர் பயணமாக கோவையில் இருந்து புதன்கிழமை சென்னைக்கு வந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக தகவல்கள் பரவியது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:

”சென்னையில் எனது மனைவி சிகிச்சைப் பெற்று வருகிறார். அதற்காகதான் நேற்று சென்னை சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளேன். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை.

கட்சியின் ஒருங்கிணைப்பு பணிக்காக பல்வேறு நண்பர்கள் என்னுடன் பேசியுள்ளனர். அனைவரின் மனதிலும் ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. யார் என்னிடம் பேசினார்கள் என்பதை வெளியிட முடியாது? இன்றுவரை நான் கூறியதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது, அனைவருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை பிரதிபலிக்கிறது” என்றார்.

Sengottaiyan says he didn't meet TTV Dhinakaran

இதையும் படிக்க : டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தமிழக அரசின் முதன்மைச் செயலா் பீலா வெங்கடேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பீலா... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வட்டமடித்த பின்னர், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.இந்த விமானம் சென்னையில் தரையிறங்காமல் வட்டமடித்த... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம்... மேலும் பார்க்க

டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: கே. அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக மூத்த தலைவா் நடிகா் சரத்குமாரின் மாமியாரும், நடி... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அம... மேலும் பார்க்க