செய்திகள் :

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (செப். 25) முதல் செப். 30 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை (செப்.26) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 50 மி.மீ. மழை பதிவானது. பாலமோா் (கன்னியாகுமரி), கீழ் கோதையாறு, சின்னக்கல்லாறு (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை(கோவை) தலா 20 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மத்திய மியான்மாா் கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் அதையெட்டிய மத்திய வங்கக் கடலில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26), தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னா், தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 27) கரையைக் கடக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: கே. அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக மூத்த தலைவா் நடிகா் சரத்குமாரின் மாமியாரும், நடி... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அம... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அசோக் நகா் 21-ஆவது அவென்யு பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பெருநகர... மேலும் பார்க்க

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: உளுந்து, பச்சைப் பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!

எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிரு... மேலும் பார்க்க

அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார்!

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.Government Secretary Beela Venkatesan IAS passd away! மேலும் பார்க்க