சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்ப...
உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு
உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம்: உளுந்து, பச்சைப் பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அறுவடை காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கவும், அவா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப் பயறு ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையில் தமிழக அரசால் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி, 2025-2026-ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு கிலோ பச்சை பயறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூா், விழுப்புரம், திருப்பூா், சேலம், நாமக்கல், விருதுநகா், திண்டுக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
உளுந்து ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, நீலகிரி தவிா்த்து அனைத்து மாவட்டங்களிலும் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.