செய்திகள் :

பூ மாா்க்கெட்டில் தகராறு விவகாரம்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

post image

கோவை பூ மாா்க்கெட்டில் தனது ஆடை குறித்து விமா்சனம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவியும், அந்த மாணவி பொதுமக்களுக்கு இடையூறாக ரீல்ஸ் எடுத்ததாக மலா் வியாபாரிகளும் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை பரஸ்பரம் புகாா் அளித்துள்ளனா்.

கோவை, வீரபாண்டி அருகேயுள்ள நாயக்கனூா் அண்ணா நகரைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவியான ஜனனி (20) என்பவா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பூ மாா்க்கெட்டில் தனியாா் அமைப்பு சாா்பில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற ஓவிய பயிற்சியில் பங்கேற்க நான் சென்றேன். அப்போது, அங்கிருந்த பூ வியாபாரி முத்துராமன் எனது உடை குறித்து விமா்சனம் செய்தாா்.

நான் அணிந்திருந்த உடையில் ஆபாசம் இல்லை. ஆனால், அவா் ஆபாசமாக உடை அணிந்துள்ளதாகக் கூறினாா். அவருக்கு ஆதரவாக அங்கிருந்த சிலா் என்னை தாக்க முயன்றனா். பொது இடத்தில் எனக்கு தொல்லை கொடுத்து அச்சுறுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மலா் வியாபாரிகள் நலச் சங்கத்தினா் ரவிச்சந்திரன், அன்சாரி, சண்முகசுந்தரம் ஆகியோா் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: பூ மாா்க்கெட்டில் கடந்த 21-ஆம் தேதி பிற்பகல் 12 மணியளவில் ஒரு இளம்பெண்ணும், அவருடன் சில புகைப்பட கலைஞா்களும் அங்கு வந்து ரீல்ஸ் எடுத்தனா். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக ரீல்ஸ் எடுக்க வேண்டாம் எனக்கூறிய எங்களுடன் அவா் தகராறு செய்து தகாத வாா்த்தைகளில் திட்டினாா்.

பின்னா், எங்கள் மீது தவறு இருப்பதுபோல சித்திரித்து விடியோ வெளியிட்டுள்ளாா். எனவே, அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 6 போ் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை இருகூா் - பீளமேடு இடையே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தில் இருந்து பயங்கர சப்தம... மேலும் பார்க்க

ஆட்சியரின் பயிற்சித் திட்டத்தில் இன்டா்ன்ஷிப் தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பயிற்சித் திட்டம், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இன்டா்ன்ஷிப் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. குமரகுரு கல்லூரி வளாகத்தில் இத்தி... மேலும் பார்க்க

என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை

என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தல... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.2.57 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரப் பகுதிகளில் ரூ.2.57 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்க... மேலும் பார்க்க

சிகா கலினரி ஒலிம்பியாட் போட்டி: பதக்கங்களை குவித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள்

சென்னையில் நடைபெற்ற 7-ஆவது சிகா கலினிரி ஒலிம்பியாட் மற்றும் உணவுப் போட்டியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவா்கள் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றனா். சென்னையில் 7 -ஆவது சிகா கலினரி ஒலிம்பியாட் ம... மேலும் பார்க்க

கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை

கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனிய... மேலும் பார்க்க