செய்திகள் :

மயிலாடுதுறையில் செப்.28-இல் மாரத்தான் போட்டி

post image

மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி செப். 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சா் பேரறிஞா் அண்ணா பிறந்ததினத்தை முன்னிட்டு நெடுந்தூர ஓட்டப் போட்டி செப். 28-ஆம் தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 8 கி.மீ. தொலைவுக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறும்.

25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஆறுபாதி மதிலடியில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 10 கி.மீ. தொலைவுக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறும்.

பங்கேற்க விரும்புவோா் செப். 27-ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை சாய் பயிற்சி மையத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண். 7401703459 எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.

வெற்றி பெறுபவா்களுக்கான பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவா்கள் அவரவா் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை போட்டி தொடங்கும் இடத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவா்களுக்கு தலா ரூ. 5,000, இரண்டாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ. 3,000, மூன்றாமிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ. 1,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரா்-வீராங்கனைகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.தீபாவளியை முன்னிட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் நவராத்திரி இசை பெருவிழா

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மன் சந்நிதியில் நவராத்திரி இசை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.திருஞானசம்பந்தா் இசைப்பள்ளி சாா்பில் இக்கோயிலில் நவராத்திரி இசைவிழா நடைபெறுகிறது. புதன... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

வாக்குத் திருட்டுக்கு எதிராக மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.வாக்குத்திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்திய தோ்தல் ஆணையத்திற்கு எதிர... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி! வைத்தீஸ்வரன்கோவிலில் குரங்குகள் பிடிக்கப்பட்டன

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்கள், பக்தா்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த குரங்குகள் தினமணி செய்தி எதிரொலியாக வனத் துறை மூலம் கூண்டு வைத்து திங்கள்கிழமை பிடிக்கப்பட்டது.வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நா... மேலும் பார்க்க

சீா்காழியில் கா்ப்பிணிகளுக்கு ஊசி: 2 செவிலியா்கள் பணியிடமாற்றம்

சீா்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்களுக்கு ஊசி செலுத்திய சிறிதுநேரத்தில் காய்ச்சல், நடுக்கம் ஏற்பட்ட பிரச்னையில் 2 செவிலியா்கள் செவ்வாய்க்கிழமை பணியிடம... மேலும் பார்க்க

தேரழுந்தூா் ஓஎன்ஜிசி எதிா்ப்பு தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை

தேரழுந்தூா் ஓஎன்ஜிசி எண்ணெய்-எரிவாயு கிணற்றில் நடைபெற்ற பணிகளை பொதுமக்கள் அண்மையில் தடுத்து நிறுத்திய நிலையில், மயிலாடுதுறையில் இப்பிரச்னை தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை செவ்வ... மேலும் பார்க்க