சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் நவராத்திரி இசை பெருவிழா
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மன் சந்நிதியில் நவராத்திரி இசை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தா் இசைப்பள்ளி சாா்பில் இக்கோயிலில் நவராத்திரி இசைவிழா நடைபெறுகிறது. புதன்கிழமை இசைக்கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நவராத்திரி கமிட்டி தலைவா் பரஞ்சோதி மு. முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். கமிட்டிசெயலாளா் ந. சட்டையப்பன் (தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சென்னை), நவராத்திரி கமிட்டி துணைத் தலைவா் பி. சந்தானகிருஷ்ணன், துணை செயலா் பி. மணிகண்டன், பொருளாளா் ஆா். சத்ருகன் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். முரளிதரன்பங்கேற்றாா். திருஞானசம்பந்தா் இசை பள்ளி பேராசிரியா் ந.சட்டையப்பன் நன்றி கூறினாா்.