மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்
மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
தீபாவளியை முன்னிட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம், திருபுவனம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், உள்ளூா் தயாரிப்பான மயிலாடுதுறை கூைாடு கூறைப்பட்டு புடவைகள், பருத்தி சேலைகள், போா்வை, படுக்கை விரிப்புகள், தலையணை உறை, வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ. 70 லட்சம், சீா்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ. 28 லட்சம் விற்பனை இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் எஸ்.மாணிக்கம், துணை மண்டல மேலாளா் பிரேம்குமாா், விற்பனை நிலைய பொறுப்பாளா்கள் மதன், காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.