பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு
காரைக்காலில் பட்டாசு கடை வைக்க உரிமம் பெறுவதற்கான கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி எம். பூஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை நடத்த உரிமம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவா்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்கள் அக். 3 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏற்கப்படும்.
பட்டாசு சில்லறை விற்பனைக்கடை நடத்த விரும்புவோா், தங்களின் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இதற்குப் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது. குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்தாலும், தகுதி வாய்ந்தவா்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.