குண்டடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
குண்டடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
தாராபுரம் தாலுகா, குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சூரியநல்லூா், கொக்கம்பாளையம், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு குண்டடத்தில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், முகாமில் உடனடியாகத் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் மொத்தம் 857 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துராஜா, குண்டடம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் எஸ்.சந்திரசேகரன் மற்றும் குண்டடம் பகுதியைச் சோ்ந்த அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.