உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முற்றுகை
அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அனைத்து வணிகா் சங்கத்தினா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் கூறியதாவது: அவிநாசி -கோவை பிரதான சாலை, அவிநாசி-சேவூா் சாலைகளில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது, வாகன விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
நெடுஞ்சாலைத் துறையினா் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் அகற்றுவதாக உறுதியளிக்கின்றனா். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்கின்றனா். ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அரசுத் துறையினா் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.
நெடுஞ்சாலைத் துறையினா், அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில் வியாழக்கிழமை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.