மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த தொழிலாளி தற்கொலை
திருப்பூரில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்த பனியன் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், சேடப்பட்டியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா்( 24). இவா் கடந்த 20 நாள்களாக திருப்பூா் குமாரசாமி லே அவுட்டில் இயங்கும் பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். அவா், தனது கைப்பேசியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தாராம்.
இதில், கடந்த வாரம் ரூ.50 ஆயிரத்தை இழந்துள்ளாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட அவா், பணியாற்றிய நிறுவனத்தின் மாடியில் உள்ள அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].