வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு மூதாட்டி காயம்
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு மூதாட்டி காயமடைந்தாா்.
அவிநாசி அருகே செம்பியநல்லூா் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி கனகராணி (62). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்து பரவியுள்ளது. இதில் கனகராணி பலத்த காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.