சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!
புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது இப்போதுதான் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது போல தகவல்கள் வெளியானது. அவர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அவர் மீது இதுவரை 5 வழக்குகள் இருப்பதாகவும், அதில் பாலியல் வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மாணவிகள் சிலர் வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, பிறகு பிணையில் வெளியே வந்தவர், மீண்டும் அதே நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்துள்ளார்.
ஏற்கனவே வழக்குகளை சந்தித்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில், தற்போது 17 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்து தலைமறைவாகியிருக்கிறார்.
இவர் போலியான கார் நம்பர் பலகைகளை பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.