செய்திகள் :

"ஒரே மேடையில் அஜித்தும், விஜய்யும் பேசும் வீடியோ" - சீக்ரெட் சொல்லும் A.M. ரத்னம்

post image

ஏற்கெனவே 'கில்லி' படத்தை ரீ ரிலீஸ் செய்து வசூலை அள்ளி அள்ளிக் குவித்தவர், A.M. ரத்னம். இப்போது குஷி படத்தை வெளியிடும் குஷியில் இருந்த தயாரிப்பாளரிடம் பேசினோம்.

'குஷி' படம் உருவான விதம் குறித்துப் பேசியவர், "வாலி படத்தை பார்த்த உடனே எனக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. டைரக்டர் எஸ். ஜே. சூர்யாவை உடனே ஒப்பந்தம் செய்தேன். அவருக்கு முன்னாடியே அஜித் பழக்கம் என்பதால் கதை சொல்ல நினைத்தோம். அப்போது அஜித்தின் கால்ஷீட் பொறுப்பை கவனித்து வந்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தேதிகள் இல்லை என்று கை விரித்து விட்டார். அதன்பின்னர் சூர்யா சொன்ன கதை விஜய்க்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அப்புறம் என்ன 'குஷி' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பித்து விட்டது.

குஷி படத்தில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா
குஷி படத்தில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா

Kushi Re Release: `` குஷி கதை சொன்னதும் விஜய் சார் கொடுத்த ரியாக்‌ஷன்!" - எஸ்.ஜே சூர்யா

'குஷி 'படத்துக்கு விஜய்க்கான சம்பளமாக ஒரு குறிப்பட்ட பணத்தை கொடுக்கவில்லை

ஒரு படத்தை பூஜை போட்டு தொடங்கும்போதே பட்ஜெட் கணக்கு போட்டு எந்தப் படத்தையும் எடுத்ததே இல்லை. `இந்தியன்' திரைப்படம் உட்பட. தென்னிந்திய சினிமா உலகில் M.G என்கிற மினிமம் கியாரண்டி முறையை முதன் முதலில் அறிமுகம் செய்து அமுல்படுத்தியது நான்தான்.

'குஷி 'படத்துக்கு விஜய்க்கான சம்பளமாக ஒரு குறிப்பட்ட பணத்தை கொடுக்கவில்லை. சென்னை மற்றும் ஓவர்சீஸ் விநியோக உரிமையை வாங்கிக் கொண்டார். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது. அந்த சமயத்தில் 'காதல் கோட்டை' படத்தை தெலுங்கில் நான் ரிலீஸ் செய்ய, அந்தப்படம் 100 நாள்களைக் கடந்து பெரும் வெற்றி பெற்றது. அப்போது எனக்கு அஜித் நல்ல பழக்கமானார்.

ஒரே மேடையில் அஜித்தும், விஜய்யும்

அந்த உரிமையில் குஷிபட ஆடியோ விழாவுக்கு அஜித்தை அழைத்தேன் அவரும் மறுக்காமல் கலந்து கொண்டார். அப்போது அஜித்தும், விஜய்யும் ஒரே மேடையில் தோன்றி பேசியது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது எடுத்த வீடியோ கைவசம் இல்லை, இந்திருந்தால் இப்போது குஷி ரீ ரிலிஸ்போது தியேட்டர்களில் ஒரே மேடையில் அஜித்தும், விஜயும் பேசும் காட்சியை ஒளிபரப்பியிருப்பேன்.

விஜய், ரஜினி
விஜய், ரஜினி

Kushi Rerelease: ``குஷியைத் தொடர்ந்து விஜய் சாரோட அந்தப் படத்தையும் ரீரிலீஸ் பண்றோம்" - சக்திவேலன்

ஒரே மேடையில் ரஜினி சாரும், விஜய்யும்

'குஷி' பட ஆடியோ விழாவைப் போலவே 'கில்லி' பட வெற்றி விழாவில் ரஜினி சாரும், விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொண்ட வீடியோ பதிவு கிடைக்கவில்லை. 'குஷி' படத்தில் இடம்பெற்ற `மேகம் கருக்குது' பாடல் காட்சிக்கான ஷுட்டிங் ஸ்பாட் பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை அருகே நானும், தோட்டாதரணியும் தேடிக் கண்டுபிடித்தோம்.

எனக்கு ஜீவா, ராஜு சுந்தரம் நெருங்கிய நண்பர்கள். `இந்தியன்', `ரன்', `குஷி' மூன்று படத்துக்கும் கேமரா ஜீவா. அதுபோல விவேக்கும் நல்ல நண்பர் `தூள்', `ரன்', `குஷி' படங்களில் அவர் நடித்துக்கொடுத்தார். ஜீவா, விவேக் இருவரும் இறந்து போனது எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. முதலில் ரிலீஸ் செய்த 'கில்லி' திரைப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

விவேக்

அடுத்து தூள், ரன், பாய்ஸ்:

இப்போது 'குஷி' வெளியாகிறது. அடுத்து `தூள்', `ரன்', `பாய்ஸ்' படங்களை ரீ ரிலிஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். `குஷி' படத்தை செகண்ட் பார்ட் எடுத்தால் அதில் விஜய் நடிக்க வேண்டும், சூர்யா இயக்க வேண்டும் என்று சொன்னேன். விஜய் தீவிரமாக அரசியலில் இறங்கி விட்டதால் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அதில் நடிக்க வேண்டும், எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும், நான் தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசை" என்று கூறி முடித்தார்.

"பொதுக்குழுவ கூட்டச் சொன்னதுக்கு சஸ்பென்ட் பண்ணிட்டாங்க" - திரைப்படத் தயாரிப்பாளர் சங்க மல்லுக்கட்டு

சங்கங்களில் எல்லாம் இது கலக காலம் போல. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு எதிராக நடிகர் நம்பிராஜன் தொடுத்த வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வரலாமென்கிறார்கள்.மறுபுறம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்... மேலும் பார்க்க

"நீ எப்பவும் அவருக்கு விசுவாசமாக இருக்கணும்னு சொல்லிருக்கேன்" - தனுஷாக நடித்த மாஸ்டர் தீகனின் அம்மா

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

KPY பாலா: ``பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன?" - சீமான் கேள்வி

KPY பாலா தொடர்ந்து சிலருக்கு உதவி செய்துவருவதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் உதவி செய்வதற்குப் பின்னணியில் சில திட்டம் இருப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பா... மேலும் பார்க்க

சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூரி

MS பாஸ்கர்MS பாஸ்கர், தமிழ் திரையுலகின் அற்புதமான கலைஞர் எனக் கூறலாம். நாடகக் கலைஞரான இவர், 1987-ம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ச... மேலும் பார்க்க

Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!

தவணைத் தொகை செலுத்தாத காரணத்தினால் சென்னை ஈஞ்சம்பாக்கத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள நடிகர் ரவி மோகனின் வீட்டிற்கு தனியார் வங்கி அதிகாரி இன்று (24.09.25) நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார். Ravi Mohanநடி... மேலும் பார்க்க