இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்...
ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை
குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனா்.
இந்நிலையில் அங்கு பாலம் கட்ட அரசு ரூ.3.59 கோடியை ஒதுக்கியது. இதையடுத்து பாலம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. எம்எல்ஏ அமலுவிஜயன்பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பி.சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கம், தீபிகாபரத், சரவணன், சீவூா் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி, முன்னாள் தலைவா்கள் கள்ளூா் கே.ரவி, த.அகோரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.