சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீநாராயணி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி, அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீநாராயணி பீடத்தில் தினமும் ஸ்ரீநாராயணி மூல மந்திர மகா யாகம், தினமும் மாலை 7 மணிக்கு பரதநாட்டியம், குச்சுபுடி, ஒடிசி, கதக் நாட்டுப்புற நடனம், பக்திப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரீசக்தி அம்மா பங்கேற்று, அம்மனுக்கு ஆரத்தி செய்து பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.