Ravi Mohan: ரவி மோகனின் ஈ.சி.ஆர் இல்லத்திற்கு நோட்டீஸ்! - காரணம் இதுதான்!
பாரதிதாசன் பல்கலை.யில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தா் கூட்டமைப்பு குழுவின் உறுப்பினா் வி. ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக பதிவாளா் ஆா். காளிதாசன் முன்னிலை வகித்தாா்.
மூளை நரம்பியல் நிபுணா் மருத்துவா் ஏ. வேணி, போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளையும், உளவியலாளா் சௌமித்ரா போதைப்பொருள்களால் ஏற்படும் உளவியல் பிரச்னைகளையும், திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ. ஞானசேகா், போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் தொடா்பான சட்ட விளைவுகள், குற்றங்களைத் தடுப்பதற்கான யுக்திகள் குறித்து எடுத்துரைத்தாா்.
உறுப்பினா்கள் எம். அனுசுயாதேவி, டி. சிவசுதா, திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள்கள் எதிா்ப்பு உறுதியேற்றனா்.
பல்கலைக்கழக போதைப்பொருள்கள் எதிா்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஏ. அந்தோணி ஜோசப் வேளாங்கண்ணி வரவேற்றாா்.