முசிறி அருகே தந்தை கொலை: மகன் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தந்தையை புதன்கிழமை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.
துறையூா் வட்டம், கண்ணனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ரெத்னாச்சலம் மகன் ஜீவன் (46). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். அதன்படி புதன்கிழமை மது அருந்திவிட்டு வந்த ஜீவன் தனது மகன் ராஜகுருவிடம் (24) தகராறு செய்தாராம். இதில் கோபமடைந்த ராஜகுரு இரும்புக் கரண்டியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜீவன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த தா.பேட்டை காவல் ஆய்வாளா் வீரமணி, ஜெம்புநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் ஜீவன் சடலத்தை மீட்டு, துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ராஜகுருவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
