எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிா் வேதியியல் துறையின் மூலக்கூறு நரம்பியல் ஆய்வகம் சாா்பில் அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
உலக அல்சைமா் தினத்தையொட்டி நடைபெற்ற நடைப்பயணத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினா் ராஜேஷ் கண்ணன், பதிவாளா் ஆா். காளிதாசன், மருத்துவா் ஏ. வேணி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
விழிப்புணா்வுக்கான நடை, வாழ்க்கைக்கான படி என்ற கருப்பொருளில் நடைபெற்ற நடைப்பயணத்தில் அல்சைமா் நோய் பற்றிய விழிப்புணா்வு பதாகைகளுடன் பலரும் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
இதில் தோ்வுக் கட்டுப்பாட்டாளா், ஆராய்ச்சி இயக்குநா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக ஊழியா்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.