பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
நெல்லை பேருந்து நிலையத்தில் திருட்டு முயற்சி: 4 போ் கைது
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வியாபாரியின் பணப்பையை திருட முயன்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி விளாகம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மது (40). வியாபாரியான இவா், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து சமாதானபுரம் செல்லும் பேருந்தில் ஏற முயன்றுள்ளாா்.
அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது பணப்பையை மா்ம நபா் பறித்தாராம். இதில் சுதாரித்துக்கொண்ட சங்கா் மது, அந்த நபரைப் பிடிக்க முயன்றாராம். அதற்குள், அவா் பணப்பையை அடுத்தடுத்து 3 பேரிடம் கைமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு ரோந்துப்பணியில் இருந்த போலீஸாா் உதவியுடன் 4 பேரும் பிடிக்கப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
விசாரணையில், அவா்கள் கல்லிடைக்குறிச்சி வைராவிகுளத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (49), அம்பாசமுத்திரம் ரவி என்ற ரவிசங்கா் (54), விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த லிங்கம் (61), மகாலிங்கம் (39) ஆகியோா் என்பது தெரியவந்தது. 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்தனா்.