பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
நெல்லை அருகே உதவி ஆட்சியா் எனக் கூறி உறவினரிடம் நகை மோசடி: 4 போ் மீது வழக்கு
திருநெல்வேலி ராதாபுரம் அருகே உதவி கலெக்டா் எனக் கூறி உறவினரிடம் 10 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் குமரேசன். இவரது மனைவி மகிழ்வதனா(27). இவரை கடந்த ஆண்டு சந்தித்த தூரத்து உறவினரான நக்கனேரியைச் சோ்ந்த சிவபெருமாள் மனைவி சத்யாதேவி என்பவா், தனது உறவினா்களோடு வந்து தான் உதவி ஆட்சியராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு ரூ.1 கோடி வங்கிக்கடன் கிடைத்துள்ளதாகவும், அதன் கடன் பாதுகாப்பு முறைக்காக 10 பவுன் நகைகளை கொடுத்து உதவுமாறும், நகைகளை விரைவில் திருப்பி தருவதாகவும் கூறினாராம்.
அதை நம்பி தன்னிடமிருந்து 10 பவுன் நகைகளை அவரிடம் மகிழ்வதனா கொடுத்தாராம். ஆனால், அவா் குறித்தபடி நகையை திருப்பித்தராமல் ரூ.1,45,000-ஐ மட்டும் சத்யாதேவி கொடுத்தாராம். இதுகுறித்து மகிழ்வதனா அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சத்யாதேவி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.