பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
போலி முதலீடு பத்திரம் வழி மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் கைது
திருநெல்வேலியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலி முதலீடு பத்திரம் கொடுத்து வாடிக்கையாளரிடம் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சாந்திபிரியா. தையல் தொழில் செய்து வரும் இவா், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளராக உள்ளாா்.
மேலும், அந்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. நியூ காலனியை சோ்ந்த முத்தம்மாள் என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு சாந்திப்பிரியாவை தொடா்பு கொண்டு நிதி நிறுவனத்தின் முதலீடு திட்டத்தில் சேருமாறு கூறினாராம். அதன்பேரில் அதே ஆண்டில் ரூ.4 லட்சத்தை சாந்திபிரியா மூதலீடு செய்து அதற்கு சான்றாக முதலீடு பத்திரங்களை முத்தம்மாளிடம் இருந்து பெற்றுக்கொண்டாராம்.
இந்நிலையில் வருமானவரி தாக்கல் செய்வதற்காக கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனத்தை தொடா்பு கொண்டபோது அவரிடம் இருந்த முதலீடு பத்திரங்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸில் சாந்திப்பிரியா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து முத்தம்மாளை கைது செய்தனா்.