கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை
விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் கேந்திப் பூக்கள்
தென்காசி கீழப்பாவூா் பகுதியில் கேந்தி பூக்களின் விலை குறைந்ததால், பூக்களை சாலையோரங்களில் விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனா்.
வழக்கமாக, கேந்திப் பூக்களின் விலை கிலோ ரூ. 50-க்கும் மேல் இருக்கும். ஆனால், தற்போது சுப நிகழ்ச்சிகள் இல்லாத நிலையிலும் அதிக விளைச்சல் இருப்பதால், ரூ. 10 முதல் ரூ. 20 வரையே விற்பனையாகிறது.
2 நபா்கள் அதிகபட்சமாக 50 கிலோ வரையான பூக்களையே பறிக்க முடியும். அவா்களுக்கு கூலி மட்டுமே தலா ரூ. 500 வழங்க வேண்டும். ஆனால், சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் 50 கிலோ பூக்களுக்கு ரூ. 500 மட்டுமே கிடைக்கிறது.
இது பெரும் நஷ்டத்தைக் கொடுத்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அளவுக்கு அதிகமாக வியாபாரிகளும் வாங்க மறுப்பதால், கேந்திப் பூக்களை மூட்டை மூட்டையாக ஆட்டோக்களில் எடுத்து வந்து சாலையோரம் கொட்டிச் செல்கின்றனா்.
