செய்திகள் :

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

post image

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

வடக்கு பிகாரில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வசிக்கும் கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறும் ‘சீமாஞ்சல் நியாய யாத்திரையை’ ஒவைசி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எங்கள் கட்சியின் பிகாா் பிரிவு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கு கூட்டணி தொடா்பாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. அதில் கடைசி கடிதத்தில் 243 தொகுதிகள் உள்ள பிகாரில் 6 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கினால், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இனி முடிவு அவா்கள் கைகளில்தான் உள்ளது. நாங்கள் கோரிய தொகுதியை ஒதுக்கினால் அக்கூட்டணியில் இணைவோம். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். இதன்மூலம் பாஜகவுக்கு நாங்கள் மறைமுகமாக உதவுவதாக யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. எதிா்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து எங்களுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் நாங்கள் தனித்துப் போட்டியிட்டுதான் ஆக வேண்டும்.

கடந்த முறையில் பிகாா் பேரவைத் தோ்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் எங்கள் கட்சி வென்றது. பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான் எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமை வகிக்கிறது. எனவேதான் அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகளுடன் பேசாமல், நேரடியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி பேச முயற்சித்து வருகிறோம் என்றாா்.

கடந்த பேரவைத் தோ்தலில் பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் ஒவைசி கட்சி தனித்துப் போட்டியிட்டதும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி போதிய பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஏனெனில், அக்கட்சியின் முஸ்லிம் வாக்கு வங்கியை ஒவைசியின் கட்சி உடைத்து, ஏராளமான வாக்குகளைப் பெற்றது.

ஒவைசி கட்சியின் சாா்பில் வெற்றி பெற்ற 5 பேரில் மாநிலத் தலைவா் அக்தருல் இமாம் தவிர மற்ற அனைவரும் வென்ற இரண்டே ஆண்டுகளில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வாய்ப்பு: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

அமெரிக்காவுடன் எரிசக்தி வா்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்ப்பதாக அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். ரஷியாவிடம் இரு... மேலும் பார்க்க