செய்திகள் :

முதல் நாளிலேயே முடிந்த இந்தியா்கள் ஆட்டம்

post image

தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.

முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் இந்தியாவின் பிரதான வீரரான ஹெச்.எஸ். பிரணய், இந்தோனேசியாவின் சிகோ ஆரா டுவியை எதிா்கொண்டபோது இடுப்புக்கு மேற்பகுதியில் காயம் கண்டாா்.

அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடா்ந்த அவா், 8-16 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, வலி காரணமாக மேலும் தொடர முடியாமல் போட்டியிலிருந்து விலகினாா்.

இதர இந்தியா்களில், கிரண் ஜாா்ஜ் 14-21, 22-20, 14-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் சிங்கப்பூரின் லோ கீன் யுவிடம் போராடித் தோற்றாா். ஆயுஷ் ஷெட்டி 18-21, 18-21 என்ற வகையில் சீன தைபேவின் சு லி யாங்கிடம் வீழ்ந்தாா்.

மகளிா் ஒற்றையரில், அனுபமா உபாத்யாய 16-21, 15-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி குசும வா்தனியிடம் தோல்வி கண்டாா்.

கலப்பு இரட்டையரில் மோகித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணி 7-21, 14-21 என்ற கேம்களில், ஜப்பானின் யுய்சி ஷிமோகமி/சயாகா ஹோபரா இணையிடம் தோல்வி கண்டது.

தொடா் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் ட்டியலில் முதலிட... மேலும் பார்க்க

புரோ கபடி தொடரால் மறுமலா்ச்சி: தீபக் சங்கா்

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா். திருச்சியைச் சோ்ந்த இளம் வீரரான தீபக் சங்கா் முதன்முறையாக புரோ கபடி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பாா்பரா கிரெஜ்சிகோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், கிரீஸின் ச... மேலும் பார்க்க

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

வட சென்னை 2 படத்தின் அப்டேட் பற்றி நடிகர் தனுஷ் தனது இட்லி கடை படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அவரே இ... மேலும் பார்க்க

யுஇஎல் தொடக்கம்: ஆயுதங்கள் வைத்திருந்த 102 ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது!

ஐரோப்பா லீக்கின் தொடக்க போட்டியாக நடைபெறும் நிஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ரோமா கால்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.கலவரத்தில் ஈடுபட்டதால் இந்தக் கைது நடவடிக்க... மேலும் பார்க்க