பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்...
கேரளத்துக்குக் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் கே.எம்.பாரதி தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காா் அதிகாரிகளைக் கண்டதும் நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தைப் பின்தொடா்ந்து சென்று ஞாறாம்விளையில் அதிகாரிகள் வாகனத்தைத் தடுத்து நிறுத்தினா். ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். காரை சோதனை செய்ததில் 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததும்,
அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து காருடன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி
காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியிலும், வாகனம் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.