கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை
ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ. 20 சலுகை விலையில் தரமான உணவை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டத்தில் முன்பதிவில்லாத ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் (ரூ.20) சுகாதாரமான சைவ உணவுகள் வழங்கும் திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சேவை குறித்து பயணிகள் பலரும் அறியாமல் உள்ளனா்.
சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் இயக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நடைமேடைகளிலேயே உணவு விநியோகிக்கப்படும். அத்துடன் 27 ரயில் நிலையங்களில் உள்ள 64 ஜனதா கானா கடைகள் மற்றும் தினசரிப் பயணிகள், தொலைதூரப் பயணிகள் உணவுகளை எளிதில் பெறுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.