‘நியாயமற்றது என்றார்'- தன்னுடைய மகள் தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து ராணி முகர்ஜி
71-வது தேசிய விருதுகள் நிகழ்வு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது. ஷாருக் கான், மோகன் லால், ஜி.வி. பிரகாஷ் உட்பட தேசிய விருது அறிவிக்கப்பட்ட அத்தனை திரைக்கலைஞர்களும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள்.
இந்த 71-வது தேசிய விருது விழாவில் நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய முதல் தேசிய விருதைப் பெற்றார்.

இந்த நிகழ்வுக்கு அவருடைய மகள் பெயர் பொறிக்கப்பட்ட நெக்லஸ் அணிந்து வந்த காணொளி இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் இந்தியா டுடேவுக்கு அளித்த நேர்காணலில் தன்னுடைய மகளால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை.
அதனால்தான் அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட இந்த நெக்லஸை அணிந்து வந்ததாகக் கூறியிருக்கிறார் ராணி முகர்ஜி.
அவர் அந்தப் பேட்டியில், “என்னுடைய மகள் தேசிய விருது விழாவில் பங்கேற்க விரும்பினாள். 14 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. ‘நீ என்னுடன் இருக்க முடியாது’ என்று நான் அவளிடம் சொல்ல வேண்டியிருந்தது.
அவள், எனது சிறப்பு நாளில் தன்னால் என்னுடன் இருக்க முடியாதது ‘நியாயமற்றது’ என்று கூறினாள்.
நான் அவளிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறி, எனது சிறப்பு நாளில் நீ என்னுடன் இருப்பாய் என்று சொன்னேன்.

அவள் எனது அதிர்ஷ்ட வசீகரம். நான் அவளை என்னுடன் வைத்திருக்க விரும்பினேன்.
என்னுடைய நெக்லஸ் காணொளி குறித்து ‘ராணி தனது மகளை தூக்கிக்கொண்டு சென்றார்’ என்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் ஸ்னிப்பெட்ஸ் செய்து எழுதிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
நான் அவற்றை ஆதிராவுக்கு காண்பித்தேன். அது அவளை அமைதிப்படுத்தியது,” எனக் கூறியிருக்கிறார்.