செய்திகள் :

கரூர்: ``கற்பனை செய்ய முடியாத சோகம்'' - ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இரங்கல்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் பகுதியில் பரப்புரை நடத்தினார்.

30,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.

Karur TVK Stampede
Karur TVK Stampede

இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

ராகுல் காந்தி, "கரூரில், அரசியல் பேரணியில் நடந்த சம்பவத்தால் வருந்துகிறேன். இது பலரின் உயிர்களைப் பறித்துவிட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யவும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படவும் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

பிரியங்கா காந்தி கரூர் சம்பவம் குறித்து,

"கரூரில் நடந்த பயங்கரமான கூட்ட நெரிசலால் மனம் உடைந்து போயுள்ளேன். இந்தக் கற்பனை செய்ய முடியாத சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும்.

இந்தக் கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவவும், நிவாரண முயற்சிகளில் குடும்பங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆதரவளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்," எனப் பதிவிட்டிருக்கிறார்.

கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: ``நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது!" - ரஜினி, கமல் இரங்கல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூர் பகுதியில் பரப்புரை நடத்தினார். 30,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் கூட்டம் அதிகளவில் கூடியதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கி... மேலும் பார்க்க

கரூர்: ``33 பேர் வரும் வழியிலேயே பலி, 6 குழந்தைகள், 17 பெண்கள்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், சிலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.விஜய் கரூரில்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: `வரும் செய்திகள் கவலையளிக்கின்றன; உடனடி சிகிச்சைகளை' - முதல்வர் ஸ்டாலின்

கரூரில் விஜய்யின் பிரசாரத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சு திணறி பலரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும், பலர் பலியாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று விஜய், ந... மேலும் பார்க்க

"பாகிஸ்தான் ராணுவம்தான் இந்தியாவிடம் கெஞ்சியது" - பாக். பிரதமருக்கு இந்தியா கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடந்து வருகிறது.இதில் மே 2025 மோதல் என இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷன் பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "போர் நிறுத்... மேலும் பார்க்க