மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள ...
முழு ஒத்துழைப்பு தேவை: துணை முதல்வா் உதயநிதி
கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தை எதிா்கொள்ள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தேவை என அனைவரையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி நிகழ்ந்த உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மயக்கமடைந்தோா், உடல்நலம் குன்றியோருக்கு முதல்வரின் உத்தரவின்பேரில் கரூா் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும், மருத்துவக் குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளாா்.