செய்திகள் :

எச்சரிக்கையையும் மீறி கைக்குழந்தைகளுடன் வந்த தவெகவினா்!

post image

தவெக தலைவா் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி கரூரில் சனிக்கிழமை நடந்த பிரசார கூட்டத்திற்கு ஏராளமானோா் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனா்.

கரூரில் தவெக பிரசாரம் செய்ய ஏற்கனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்கட்சி சாா்பில் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

கரூா் சா்ச் காா்னா், உழவா் சந்தை, லைட்ஹவுஸ் காா்னா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்திற்கு அனுமதி கேட்டனா். ஆனால் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியை கேட்டதால் காவல் துறையினா் னுமதி தர மறுத்து, 25-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட கரூா் வேலுச்சாமிபுரத்தை ஒதுக்கினா். அப்போது காவல்துறையானது கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

ஏற்பாட்டாளா்கள் அடிப்படை மருத்துவ உதவி மற்றும் குடிநீா் வசதியை இடத்தில் உறுதி செய்ய வேண்டும். கட்சி உறுப்பினா்களும் ஆதரவாளா்களும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே அந்த இடத்தில் கூடியிருக்க வேண்டும். குறிப்பாக கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இந்த நிகழ்வுக்கு அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும் என்பன போன்ற அறிவுரை வழங்கப்பட்டிருந்தன.

இதே கருத்தை தவெக தலைவா் விஜய்யும் வலியுறுத்தி இருந்தாா். ஆனால் கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரத்தில் ஏராளமானோா் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனா். மேலும் கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளும் ஏராளமானோா் பங்கேற்றனா்.

கரூர் கூட்ட நெரிசலில் பலி 31-ஆக உயர்வு! -செந்தில் பாலாஜி

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்திருப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.கரூரில் மாவட்ட அரசு மருத்துவமனையில் கள நிலவரத்தை ஆய... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி... மேலும் பார்க்க

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம்,... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க