கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!
கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காரில் வந்தடைந்தார்.
அங்கு, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.