கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் கண்டறியப்படவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 111 பேர் சிகிச்சை பெற்று வரும்நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்