செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இன்று(செப். 28) நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (செப். 28) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.

மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக சார்பில் இன்று(செப். 28) நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

Following the death of 39 people in a stampede in Karur, it has been announced that all DMK events scheduled for today (Sept. 28) have been postponed.

கரூர் கூட்ட நெரிசல் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் பலியான ... மேலும் பார்க்க

என்.ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் ... மேலும் பார்க்க

கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தையடுத்து, இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான தேர்தல் பிரசாரத்தில் 39 பேர் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.கரூர் அரசு மருத்துவமனை... மேலும் பார்க்க