என்.ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!