மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!
கரூர் கூட்ட நெரிசல் பலி: 34 பேரின் விவரம் வெளியீடு!
கரூர் கூட்ட நெரிசல் பலியானவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 25 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் கண்டறியப்படவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பலியான 34 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 28 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!